thevathi theva thevan poomiyil piranthar

தேவாதி தேவ தேவன்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

தேவாதி தேவ தேவன் பூமியில் பிறந்தார்
ராஜாதி ராஜராஜன் குடிலில் பிறந்தார்
மன்னவர் இயேசு மகிமை துறந்தார்
என்னுயிர் மீட்க மண்ணில் தவழ்ந்தார்
அழியும் உலகை மீட்டுக்கொள்ள
பொழியும் பனியில் பாலனாக
குடிலிலே ஏழைவடிவிலே
மனுஉருவிலே வந்த மகிபனே
மறையும் வாழ்வு மகிமை அடைய
எரியும் ஒளியின் தீபமாக
இறைவனே திருமறைவனே
அருள் உறைவனே வந்த சுகிர்தனே
கறையும் திறையும் அற்றுப் போக
இறையின் சாயல் பற்றிக் கொள்ள
சிலுவையில் சிந்தும் உதிரத்தில்
அன்பை அளித்திட வந்த மீட்பரே