thaveethin oorile thaveethin – Thaveethin Oorliae Thaveethin

தாவீதின் ஊரிலே தாவீதின்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

தாவீதின் ஊரிலே தாவீதின் – Thaveethin Oorliae Thaveethin
பல்லவி
தாவீதின் ஊரிலே
தாவீதின் மைந்தனாய்
ஏழையின் கோலமாய்
இயேசு பிறந்தாரே
அணு பல்லவி
நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்
கர்த்தத்துவம் அவர் தோளில் உண்டே
கவலைகைள் நமக்கில்லையே – தாவீ
சரணங்கள்
1.வேதநாயகன் விந்தை பாலகன்
கந்தை பொதிந்தவராய் – நம்
நிந்தை சுமந்தவராய்
தந்தை சொற்படி தரணியில் வந்திட்ட
ராஜாதி ராஜனவர் – நம்
தேவாதி தேவனவர் – தாவி
2.விண்ணில் தூதரும் மண்ணின் ஆயிரும்
கீதம் புகழ்ந்துவர – வான்
சாஸ்த்திரி தொடர்ந்து வர
ஆதாம் ஏவாளை வஞ்சித்த பேயின்
ஆதிக்கம் அழிப்பவராய் – தேவ
அவதாரம் எடுத்தவராய்
3.கொட்டும் பனியிலே குளிரும் இரவினிலே
கோமகன் குடிலினிலே – ஏழை
மரியாள் மடியினிலே
ஆதி வார்த்தையாம் அதிசய மைந்தன்
கிருபை நிறைந்தவராய்
வழி சத்தியமானவராய்