saththiraththai theti varungka

சத்திரத்தை தேடி வாருங்க
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

சத்திரத்தை தேடி வாருங்க
சந்தோஷமாய் ஆர்ப்பரித்து ஒன்று கூடுங்க
சாலேமின் ராஜனையே பார்க்க வாருங்க – [2]
மேலோக ராஜன் இவர்
மேன்மை விட்டு வந்தாரே பூலோக
மாந்தரின் பாவம் மீட்க வந்தாரே
மேலோக ராஜன் இவர்
மேன்மை விட்டு வந்தாரே பூலோக
மாந்தரின் பாவம் மீட்க வந்தாரே
மகிமையின் ராஜன் இவர் `
மகத்துவ தேவன் இவர்
மண்ணின் மீட்பர் இவர்
மனுவுருவானார்
மகிமையின் ராஜன் இவர்
மகத்துவ தேவன் இவர்
மண்ணின் மீட்பர் இவர்
மனுவுருவானார்
1.காட்டுக்குள்ளே பாட்டு கேட்குது
கேட்டு கேட்டு ஆயர் கூட்டம் பாட்டு பாடுது
ஆடுகளும் துள்ளி துள்ளி தலையாட்டுது
வாருங்கள் மேய்ப்பரே நாம் பெத்தலகேம் செல்லுவோம்
வானம் விட்டு பூமி வந்த மேசியாவை காணுவோம்
வாருங்கள் மேய்ப்பரே நாம் பெத்தலகேம் செல்லுவோம்
வானம் விட்டு பூமி வந்த மேசியாவை காணுவோம்
பெத்லகேமின் சத்திரத்திலே மாடடையும் குடிலினிலே
மரியன்னை மடிதனிலே மன்னனை கண்டாய்
பெத்லகேமின் சத்திரத்திலே மாடடையும் குடிலினிலே
மரியன்னை மடிதனிலே மன்னனை கண்டாய்
2.உன்னை மீட்க இயேசு வந்தாரே பாவியாம்
என்னை மீட்க இயேசு வந்தாரே பாரிலே
நம்மை மீட்க இயேசு வந்தாரே
மாசில்லா பாலனை போற்றி போற்றி பாடுவோம்
மாறிடா அன்பினை உலகம் எங்கும் சொல்லுவோம்
மாசில்லா பாலனை போற்றி போற்றி பாடுவோம்
மாறிடா அன்பினை உலகம் எங்கும் சொல்லுவோம்
இவரே இரட்சகராம், இவரே வல்லவராம்
இவரே பரிசுத்தராம் என்று பாடுவோம்
இவரே இரட்சகராம், இவரே வல்லவராம்
இவரே பரிசுத்தராம் என்று பாடுவோம்
ல …. ல .. லா ல … ல .. லா ல …ல … லா … ல – [4]