santaikalum vena kasappukal vena

சண்டைகளும் வேணா கசப்புகள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

சண்டைகளும் வேணா கசப்புகள் வேணா
பொறாமை வைராக்கியம் ஒண்ணுமே வேணா
மனுஷர் மேல் பிரியம் உண்டாவதாக
பூமியில சமாதானம் உண்டாவதாக
இது கிறிஸ்துமஸ் இது கிறிஸ்துமஸ்
என் கிறிஸ்து பிறந்ததால கிறிஸ்துமஸ்
இது கிறிஸ்துமஸ் இது கிறிஸ்துமஸ்
சமாதான பிரபு பிறந்ததால கிறிஸ்துமஸ்
1.ஏழ பணக்காரன் என்று பிரிக்காதிங்க
ஏழையாய் பிறந்தார் ஒரு ஐஸ்வர்யாவானுங்க
2.அடிமை அதிபதி எல்லாம் ஒன்னும் இல்லைங்க
அடிமையின் ரூபமானார் ஆண்டவர் பாருங்க
3.நல்லவன் கெட்டவன் என்று ஒதுக்கிடாதீங்க
கெட்டு போனதை தான் ரட்சிக்கவே வந்தாருங்க