Ratchakar Pirantharae

ரட்சகர் பிறந்தாரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

ரட்சகர் பிறந்தாரே – Ratchakar Pirantharae
இரட்சகர் பிறந்தாரே!
தாவீதின் ஊரினிலே!
இயேசு என் உள்ளில் வந்தாரே
கேளுங்கள் மானிடரே
சரணம்
1. பாரின் பாவம் போக்க இயேசு
பாரில் பாலன் ஆனார்-2
இயேசுவின் அன்பைப் பாருங்களே
இயேசுவைப் பாடுங்களே-2 (இரட்சகர் பிறந்தாரே)
2. ஏழ்மைக் கோலம் ஏற்ற இயேசுவை
ஏழை மேய்ப்பர் கண்டார்-2
உண்மையில் நம்மை நேசித்தாரே
தன்னையே தந்தாரே-2 (இரட்சகர் பிறந்தாரே)
3.வாரும் பாரும் விந்தை நேசர்
வானவர் சொன்னார் தூயர்
பரமனின் பாச நேசத்திலே
மனதை பறி கொடுப்போம்-2 (இரட்சகர் பிறந்தாரே)