Ratchagaraai Yesu Christmas song lyrics

இரட்சகராய் இயேசு
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

இரட்சகராய் இயேசு உலகில் பிறந்தாரே
ராஜாவாய் மீண்டும் சீக்கிரம் வருவாரே -2
ஆடி பாடிடு நீயும்
துதித்து மகிழ்ந்திடு
மன்னவர் பிறந்ததாலே கொண்டாடிடு -2
1.பாவங்களை போக்கிட வந்தாரே -2
பரிசுத்தமாய் நம்மை மாற்றிடவே
பாடுகளை கண்டு நீ கலங்கிடாதே
பரலோகத்தை நீ வாஞ்சித்திடு -2 – ஆடி பாடிடு
2.பாலகனாய் பிறந்தாரே என்னை மீட்டிட-2
பாதை அறியாமல் வாழ்ந்த என்னையும் கண்டீரே
பெலப்படுத்திடும் உம் கிருபையாலே(என்னை)
இயேசுவின் வருகையை அறிவிக்கவே -2 – ஆடி பாடிடு
3.உத்தம குமாரனாய் பிறந்தீரே-2
உதவாத என்னையும் நேசித்தீரே
இஸ்ரவேலை ஆளுகிறவர்
வருகின்றாரே ஆயத்தப்படுவோம் – இரட்சகராய் இயேசு