rasathi rasa engka maka rasa

ராசாதி ராசா எங்க

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

ராசாதி ராசா எங்க மக ராசா
இந்த ஏழைங்கள
ஆள வந்த இயேசு ராசா
மனசெல்லாம் சந்தோஷம் பொங்குதுங்க
சின்னச் சிறுசல்லாம் சங்கீதம் பாடுதுங்க – ராசாதி
பூப்போல முகமுங்க அத பார்த்தாலே அழகுங்க-2
சகிக்காத இடமுங்க அங்கே பொறந்தாரே மகனுங்க
கதிதானோ ஏனுங்க
அந்த கதையெல்லாம் கேளுங்க- இராசாதி
கன்னிமேரி புள்ளைங்க சுத்த கந்த கூட இல்லீங்க-2
மண்ணுமேல வந்ததுங்க இடம் ஒன்னு கூட இல்லீங்க
சொன்னபடி பொறந்ததுங்க எங்க என்னமெல்லாம் நிறைஞ்ததுங்க – இராசாதி
தேவாதி தேவனுங்க அவர் தேவ குமாரனுங்க -2
நன்மை செய்ய வந்தாருங்க இங்கு நல்ல மனசு இல்லீங்க
பாவியான மனுஷனுக்கு கொஞ்சம் பாசம் கூட இல்லீங்க – இராசாதி