rajathi rajavam thevathi thevanam

ராஜாதி ராஜாவாம்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

ராஜாதி ராஜாவாம் தேவாதி தேவனாம்
அதிசயமானவரே
ஆலோசனைக்கர்த்தரே
வல்லமையுள்ள தேவா
நித்தியமான பிதா
சமாதான பிரபு இவர்
இம்மானுவேலானவர் – இயேசு
விண்ணிலிருந்து மண்ணில் வந்தாரே
மண்ணான மனிதன் என்னை மீட்டுக்கொண்டாரே
பாவத்தினாலே கட்டப்பட்ட என்னை – 2
பரிசுத்த இரத்தத்தாலே கட்டவிழ்த்தாரே
பரிசுத்த இரத்தத்தாலே விடுவித்தாரே
சரணம்.. சரணம்
சருவேஸ்வரனே… சருவேஸ்வரனே…
ஜீவ வார்த்தை மாம்சமானார்
தேவ குமாரன் மனிதரானார்
இருளை அகற்ற ஒளியாய் உதித்தார் – 2
தம்மை தாழ்த்தி நம் துயர் துடைத்தார் – 2
இருளான காலத்திலும் இம்மானுவேல்
புயல் காற்று வந்தாலும் இம்மானுவேல்
கண்ணீரை துடைப்பவர் இம்மானுவேல்
குறைவின் மத்தியிலும் இம்மானுவேல்
கூடவே இருப்பாரே இம்மானுவேல்
கூடவே இருப்பாரே இம்மானுவேல்