poorruvoom palanai

போற்றுவோம் பாலனை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

போற்றுவோம் பாலனை
வாழ்த்துவோம் இயேசுவை
வணங்குவோம் மைந்தனை
போற்றுவோம் வாழ்த்துவோம் வணங்குவோம்
1.பாவங்கள் போக்கிடவும்
சாபங்கள் நீக்கிடவும்
மனிதரை ரட்சிக்கவும்
பரந்தனில் சேர்த்திடவும்
ஏதேனின் பாவம் சாபங்கள் நீங்கிட
ஏழையாய் பிறந்தவரை
போற்றுவோம் வாழ்த்துவோம் வணங்குவோம்
2.வின் தூதர் வாழ்த்திடவும்
மேய்ப்பர்கள் துதித்திடவும்
ராஜாக்கள் பணிந்திடவும்
மனுக்குலம் மகிழ்ந்திடவும்
சமாதானம் அன்பு புவியில் பெருகிட
ஏழையாய் பிறந்தவரை
போற்றுவோம் வாழ்த்துவோம் வணங்குவோம்
3.தீர்க்கர்கள் வாக்குகளை
உண்மையாய் நிறைவேற்றிட
பிதாவின் சித்தமதை
முழுமையாய் முடித்திடவும்
பரலோக மேன்மை வல்லமை வெறுத்து
ஏழையாய் பிறந்தவரை
போற்றுவோம் வாழ்த்துவோம் வணங்குவோம்