Piranthar Yesu Manuvai christmas song lyrics

பிறந்தார் இயேசு மனுவாய்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

பிறந்தார் இயேசு மனுவாய்
நம்மை மீட்க வந்தார் – 2
பாவங்கள் போக்கவே
சாபங்கள் நீக்கவே
நித்திய பிதாவை நமக்கு காட்டவே – 2
அன்பின் தேவன் உலகில் பிறந்தார்
பரலோக மேன்மைகள் யாவும் துறந்தார் – 2
நம்மை மீட்டிட தம்மோடு சேர்த்திட
தேடிவந்தரே தேவமைந்தனே – 2 – பிறந்தார் இயேசு
இழந்ததைத் தேடி உலகில் வந்தார்
பாவிகளை இரட்சிக்க தேவன் மனுவானார் – 2
மாம்சமானார் வார்த்தையான தேவன்
கொண்டாடுவோம் இரட்சகர் பிறந்ததை – 2
பிறந்தார் இயேசு
ஏழை கோலமாய் பிறந்தார் இயேசு பாலன்
நம்மேல் வைத்த அன்பின் மிகுதியால் – 2
ஏற்றுக்கொள்வாயா அன்பின் தெய்வத்தை
விடுதலை தருவார் பிள்ளையாய் மாற்றுவார் – 2 – பிறந்தார் இயேசு