patal varikal – kiristhumas , varukai , puthiya varutam

புதுயுகம் பிறந்திடும் நேரத்திலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs, New Year Songs and Roman Catholic Songs collection.

பாடல் வரிகள் – கிறிஸ்துமஸ் , வருகை , புதிய வருடம்
புதுயுகம் பிறந்திடும் நேரத்திலே மலர்ந்திடும் புதுவாழ்வு -2
புதியதோர் உலகம் படைத்திடவே புறப்படு இறைக்குலமே
ஆர்ப்பரிப்போம் இன்று அகமகிழ்வோம்
இறைவனைப் புகழ்ந்திடுவோம் -2
1. நம்மைப் படைத்து பாதுகாக்கும் தந்தையின் அன்பு
மேலான அன்பு உயிர் தந்து நமை மீட்கும்
இயேசுவின் அன்பு மாறாத அன்பு வரம் பொழிந்து
வழிநடத்தும் ஆவியின் அன்பு நிலையான அன்பு-2
மூவொரு இறைவன் பகிரும் அன்பை – நாம் பகிர்வோம்-2
உலகம் நம்மை அவரின் சீடராய் – அறிந்து கொள்ளும்-2
2. இறைமனிதம் ஒன்று சேரும் பலியினில் இணைவோம் நிறைவாக வாழ இறைவார்த்தை வழி நின்று பணிதனை செய்வோம் இயேசுவைப் போல இறையாட்சி உலகினிலே மலர்ந்திட நாமும் தினம் தினம் உழைப்போம் – 2
பிரிவினை பேதங்கள் யாவையும் இன்று – நாம் களைவோம்-2
மனிதரின் முன்னே சாட்சியாய் இங்கு – நாம் வாழ்வோம்-2