1.panikkarru soozhntha neraththil

பனிக்காற்று சூழ்ந்த நேரத்தில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

1.பனிக்காற்று சூழ்ந்த நேரத்தில்
தொலைவினில் ஓர் நட்சத்திரம் வானில் ஜொலித்ததே
தூதர்கள் பகிர்ந்தார் பிறப்பின் செய்தியை
சாஸ்திரிகள் தொழுவினில் வணங்கினர் இயேசுவை
மேய்ப்பர்கள் புது கானம் பாடியே
துதித்தனர் சிறு பாலன் இயேசுவை
உன்னதத்தில் மகிமை பிறந்ததே
மனிதருள் விசுவாசம் நிலைத்ததே
பிறந்தார் இயேசு பிறந்தாரே
பாவம் போக்க பிறந்தாரே
பிறந்தார் இயேசு பிறந்தாரே
மகிழ்வின் காலம் இது தானே
வானம் பூமி போற்றிடுமே
அவர் கிருபை என்றும் நிலைத்திடுமே
மண்ணில் சமாதனம் பகிர்ந்திடவே
விண்ணின் மைந்தன் உதித்தாரே
அன்றும் என்றும்
2.மீறுதல்கள் தகர்த்திடவே பிறந்தீர்
உரைக்கப்பட்ட தரிசனங்கள் நிறைவேற்றினீர்
நீதியை நாட்டிடவே உதித்தீர்
மனிதரை மீட்கவே மலர்ந்தீர் மண்ணிலே
சோதனையில் வழுவாமல் காத்திட
சிறகுகளில் நான் தஞ்சம் அடைந்திட
வேதனையில் விலகாமல் நம்பிட
தனிமையில் நான் உம்மை நாடிட
பிறந்தார் இயேசு பிறந்தாரே
பாவம் போக்க பிறந்தாரே
பிறந்தார் இயேசு பிறந்தாரே
மகிழ்வின் காலம் இது தானே
வானம் பூமி போற்றிடுமே
அவர் கிருபை என்றும் நிலைத்திடுமே
மண்ணில் சமாதனம் பகிர்ந்திடவே
விண்ணின் மைந்தன் உதித்தாரே
அன்றும் என்றும்
எனக்காக உதித்தீர் மெய் ஒளியாக ஜோலித்தீர்
நல் மேய்ப்பனாய் தோன்றி உம் தோள்களில் சுமந்தீர் (4)
பிறந்தார் இயேசு பிறந்தாரே
பாவம் போக்க பிறந்தாரே
பிறந்தார் இயேசு பிறந்தாரே
மகிழ்வின் காலம் இது தானே
வானம் பூமி போற்றிடுமே
அவர் கிருபை என்றும் நிலைத்திடுமே
மண்ணில் சமாதனம் பகிர்ந்திடவே
விண்ணின் மைந்தன் உதித்தாரே
அன்றும் என்றும்