oru vanam sirikkirathu

ஒரு வானம் சிரிக்கிறது
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

ஒரு வானம் சிரிக்கிறது
இந்த பூமி ரசிக்கிறது
நடு வானில் வண்ணக்கோலம் தான்
ஒரு பாடல் ஒலிக்கிறது
இசைத்தானே இணைக்கிறது
இது தூதர் என்ன கோலம் தான்
இவர் கண்ணின் ஓரத்தில்
நான் கருணை கண்டேனே
இவர் விழியன் ஓரத்தில்
நான் விடியல் கண்டேனே
இவர் யாரோ இவர் யாரோ
எம் மேசியா தானோ
இவர் யாரோ இவர் யாரோ
எம் மேசியா தானோ
1.ஒரு மேக கூட்டம் தான்
துள்ளி மெல்ல போகட்டும்
இயேசு பாலன் கண்கள் மூடட்டும்
அந்த ராக கூட்டம் தான்
புது மெட்டு போடட்டும்
பாலும் தேனும் மண்ணில் ஓடட்டும்
இது பூக்கும் காலம் தான்
இசை கேட்கும் காலம் தான்
இயேசு நம்மை மீட்க்கும் காலம் தான்
இது போற்றும் காலம் தான்
துதி சாற்றும் காலம் தான்
வேதம் சொல்லி வாழ்த்தும் காலம் தான்
பனிக்காற்று வரும் இசை ஊற்று வரும்
தூதர் கூட்டம் வரும் மெல்ல பாட்டும் வரும் – இவர் யாரோ
2.ஊர் என்ன சொன்னாலும்
யார் என்ன சொன்னாலும்
இயேசு மட்டும் நேசர் என்பேனே
சிலர் பாலன் என்றாலும்
சிலர் ராஜன் என்றாலும்
நானோ இவரை தேவன் என்பேனே
பொன்னும் போளமும்
எவர் அன்புக்கு ஈடில்லை
தன்னை முற்றும் தந்து விட்டாரே
ஒரு ஆசனம் இல்லை
உயர் ஆடையும் இல்லை
என்னை தேடி வந்து விட்டாரே
அந்த ஆ-தொழுவில்
வந்த பாலகன்தான்
எந்தன் உள்ளத்தினில்
இன்று பிறந்து விட்டார் – இவர் யாரோ
ஒரு வானம் சிரிக்கிறது பாடல் வரிகள், Oru Vaanam Sirikirathu Lyrics