Odum megam aadum nilavu

ஓடும் மேகம் ஆடும் நிலவு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

ஓடும் மேகம் ஆடும் நிலவு
பாடும் தூதர் வானம் எத்தனை அழகு
அந்த வானில் தூதர் பாடிட செய்தி வந்ததே
அந்த செய்தி என்ன தெரியுமா இயேசு பிறந்தார்
ஏதேன் தந்த பாவம் நீக்க தேவன் நினைத்தாராம்
ஏக மைந்தனாம் இயேசுவை இந்த பூமிக்கு தந்தாராம்
மானிடர் மாறிட மாசற்று வாழ்ந்திட
மண்ணின் மீது இவ்வளவாக அன்பு கூர்ந்தாராம்.
உன்னத மேன்மை விட்டு உலகில் வந்தது அதிசயமே
பிறப்பிடமாக மாட்டுத் தொழுவம் தெரிந்ததும் அதிசயமே
ராஜாதி ராஜனே தேவாதி தேவனே
என்னை மீட்க விண்ணை துறந்தது எத்தனை அதிசயமே