neela vanil neenthum nilave

நீல வானில் நீந்தும் நிலவே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

நீல வானில் நீந்தும் நிலவே
தாலாட்ட நீ வா
நீல வானில் நீந்தும் நிலவே
தாலாட்ட நீ வா
நேசர் எங்கள் இயேசு பாலன்
புன்னகையை பார்த்து
நீல வானில் நீந்தும் நிலவே
தாலாட்ட நீ வா
வானகத்து சொர்க்கம்
மண்ணில் வந்து மலரும்
காணும் நெஞ்சில் இன்பம்
விழாக்கள் நாளும்
என்னென்று சொல்லி நான் பாடுவேன்
என் இயேசு பாலகனை சீராட்டுவேன்
1.காலம் கணியாகும்
கனவின் திருக்கோலம் கண்டேன்
ஞான பாலகனை
கன்னி தாய் மடியில் இங்கே
தேவன் வருகையினை
ஒளி தாரகை தடம் சொல்ல
மூன்று ராஜாக்கள்
முகம் பார்த்து நகை சிந்த
Wish you happy christmas
2.ஆயர் குலமெல்லாம்
அருளை வேண்டியே தஞ்சம்
ஆனந்த மழை பொழிய
அகிலம் நனைகிறதே நெஞ்சம்
வாசல் திறக்கிறது
புது வாழ்வே மலர்கிறது
காணும் இடமெல்லாம்
நல் வாழ்த்து ஒலிக்கிறது
Wish you happy christmas