namakkoru palakan

பாலனைப் புகழ்வோம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.

நமக்கொரு பாலகன்
பிறந்துள்ளார்
நமக்கென மண்ணில்
மலர்ந்துள்ளார்
நமக்கொரு பாலகன்
பிறந்துள்ளார்
நமக்கென மண்ணில்
மலர்ந்துள்ளார்
பாலனைப்
புகழ்வோம் ஒன்றாகவே
பாவங்கள்
விலகி நன்றாகவே !
பாலனைப்
புகழ்வோம் ஒன்றாகவே
பாவங்கள்
விலகி நன்றாகவே !
தீவனத் தொட்டியில் தீவனமே
மானுட விடிவின் பூவனமே
வாழ்த்திப் பாடும் என் மனமே
உம்முடன் வாழ்ந்திடச் சம்மதமே
நமக்கொரு பாலகன்
பிறந்துள்ளார்
நமக்கென மண்ணில்
மலர்ந்துள்ளார்
தூதரின்
வாழ்த்து ஒலிக்கவே
யூதரின்
அச்சம் விலகவே
கிடைகள்
துயிலில் கிடக்கவே
இடையர்
வியப்பில் திளைக்கவே
மாபெரும் நற்செய்தி உண்டானது
உலகிற்கு அமைதி என்றானது !
மீட்பரின் வருகை நன்றானது
தூதரின் பேரணி கொண்டாடுது !
Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas
நமக்கொரு பாலகன்
பிறந்துள்ளார்
நமக்கென மண்ணில்
மலர்ந்துள்ளார்
விண்மீன்
விண்ணில் ஜொலிக்கவே
கீழ்த்திசை
ஞானியர் வியக்கவே
அரசனின்
வருகை புரியவே
விரைந்தனர்
காணிக்கை அளிக்கவே
பரிசுகள் பாதத்தில் மூன்றானது
பணிந்திடும் இதயம் மன்றாடுது !
மூவொரு தேவனின் அன்பானது
தன்னையே அளிக்க மனுவாகுது.
Happy Happy Christmas
Merry Merry Christmas
Happy Happy Christmas
Merry Merry Christmas
நமக்கொரு பாலகன்
பிறந்துள்ளார்
நமக்கென மண்ணில்
மலர்ந்துள்ளார்
நமக்கொரு பாலகன்
பிறந்துள்ளார்
நமக்கென மண்ணில்
மலர்ந்துள்ளார்