Namakkoru Palagan Piranthar

நமக்கொரு பாலகன் பிறந்தார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்
கர்த்துவம் அவர் தோள் மேல் இருக்கும்
அதிசயமானவர் அவரே
இயேசு என்னும் நாமம் உடையவரே
உனக்காக உலகில் இயேசு வந்தார் வந்தார்
தம் ஜீவன் தந்து மீட்க வந்தார் வந்தார் -2
1.பாவத்தை போக்க நம் சாபத்தை நீக்க-2
புது வாழ்வை தரவே அவர் ரட்சிப்பை தரவே -2
நமக்காக உலகில் இயேசு வந்தார் வந்தார்
தம் ஜீவன் தந்து மீட்க வந்தார் வந்தார் -2
2.உன் இருளை போக்க, ஒளியாக வந்தாரே-2
உன்னை விடுவிக்க, ஜீவபலியாய் வந்தாரே-2
உன்னை நேசித்தால் , பரலோகம் விட்டு வந்தார் -2 – உனக்காக
ஆலோசனை கர்த்தர் அவரே
வல்லமையுள்ள தேவன் அவரே
நித்திய பிதா அவரே
சமாதான பிரபு அவரே