Nalliravil Vandha Nayaganey Lyrics

நள்ளிரவில் வந்த நாயகனே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

நள்ளிரவில் வந்த நாயகனே
சொல் அழகில் வந்த காவலனே-2
வான தேவதைகள் புகழ் பாட எங்கள்
இதயத்தில் பிறந்த தூயவனே-2
1.தேவன் எழுதிய புத்தகமே
எங்கள் விழிகள் தேடிய சித்திரமே -2
கால காலமாய் உறவாட
மண்ணில் கால் பதித்த அன்பு தத்துவமே -2
2.உறவுக்குள் உறவாய் நேயனை
எங்கள் உயிருக்குள் உயிராய் நிலையினை -2
விண்ணுக்கு நிகராய் உயிர்வகை
எங்கள் வாழ்விற்கு துணையாய் நீ வந்தாய் -2