munnanaiyil pasum pullanaiyil

முன்னனையில் பசும் புல்லனையில்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

முன்னனையில் பசும் புல்லனையில்
மரி மடியில் அன்னை மரி மடியில்
ஒய்யாரமாய் தூங்குகிறார் சின்ன தூங்குகிறார்
ஓயாத தூதர் பாடல் கேட்கும் இயேசு பாலகன்
ஆரிரரோ பாடிடுங்கள் – முன்னனையில்
1.பொன்மேனி பாலனுக்கு புல்லனை தான் பஞ்சமோ
பூவுலக ராஜனுக்கு மாட்டு தொழுவம் தஞ்சமோ
ராஜகுமாரனுக்கு அன்னை மடி ஊஞ்சலோ
ராகங்கள் பாடுவது ஏழையின் நெஞ்சமோ
பாட்டு பாடுவேன் தாலாட்டு பாடுவேன்
ஒய்யாரமாய் தூங்குகிறார் சின்ன தூங்குகிறார்
ஓயாத தூதர் பாடல் கேட்கும் இயேசு பாலகன்
ஆரிரரோ பாடிடுங்கள் – முன்னனையில்
2..காற்று நுழைந்திட குழலோசை ஒலிக்குதே
காண பறவைகளின் குரலோசை கேட்குதே
காலை நேரத்தில் கேட்குதே பூபாளம்
காண மேய்ப்பர்கள் பாடிடும் தெம்மாங்கு
தாலாட்டுதே பாலனை தாலாட்டுதே
ஒய்யாரமாய் தூங்குகிறார் சின்ன தூங்குகிறார்
ஓயாத தூதர் பாடல் கேட்கும் இயேசு பாலகன்
ஆரிரரோ பாடிடுங்கள் – முன்னனையில்
3.மனுஷ குமாரனுக்கு தலைசாய்க்க இடமில்லையோ
மன்னாதி மன்னனுக்கு மகிமையான இடமில்லையோ
சத்திரத்தின் கூட்டத்திற்கு மேசியாவை தெரியலையோ
சர்வ வல்ல ராஜன் இவர் என்பது புரியலியோ
ஆச்சரியமே ஆனால் உண்மை அன்றோ
ஒய்யாரமாய் தூங்குகிறார் சின்ன தூங்குகிறார்
ஓயாத தூதர் பாடல் கேட்கும் இயேசு பாலகன்
ஆரிரரோ பாடிடுங்கள் – முன்னனையில்
முன்னனையில் பசும் புல்லனையில் பாடல் வரிகள், Munnanaiyil Pasum Pullanaiyil Lyrics