ManuKulatha kaaka vandha Maga Rajanae Lyrics

மனுகுலத காக்க வந்த மகா ராஜனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

மனுகுலத காக்க வந்த மகா ராஜனே
இந்த மானிடன் மேல் அன்பு வச்சா மகா தேவனே -2
எந்தன் பாவங்களை போக்க வந்தவரே
எங்கள ரட்சித்து மீட்க வந்தீரே
உங்க அன்பை எண்ணியே நாங்க நன்றி சொல்லுவோம்
உங்க அளவில்லா கிருபைக்காய் துதித்து பாடுவோம் -2
மகிமையின் தேவன் நீர் தானே
அந்த மகிமையை எங்களுக்காய் துறந்தீரே -2
மாட்டு தொழுவத்துல பிறந்தீரே
எங்க மனசுல குடியேற வந்தீரே -2
உங்க அன்புக்கு ஈடாக என்ன கொடுபோம்
நீங்க சொல்லும் வார்த்தையை கேட்டு நாங்க நடப்போம் -2
பாவ இருள் இங்க பயந்து போகுதே
எங்க மெய்யான ஒளியை பாத்து ஓடி போகுதே -2
பரிசுத்த தேவன் இங்கு பிறந்து விட்டீரே
எங்கள பரிசுத்தமாக்கவே வந்து விட்டீரே -2
உங்க அன்பை எண்ணியே நாங்க நன்றி சொல்லுவோம்
உங்க அளவில்லா கிருபைக்காய் துதித்து பாடுவோம் -2