manukula pavam pookka

மனுகுல பாவம் போக்க
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

மனுகுல பாவம் போக்க
மனு அவதாரம் எடுத்த மனுஷகுமாரனே
எங்கள் தேவகுமாரனே -2
நமக்கொரு பாலகன் நமக்கொரு குமாரன்
நமக்கொரு ரட்சகர் பிறந்தார்
பெத்லகேமிலே மாட்டு தொழுவிலே
யூத ராஜசிங்கம் பிறந்தார்
அவர் அதிசய, ஆலோசனை, நித்திய,
சமாதான, வல்லமை
மனதுருக்கமும், இரக்கமும், சாந்தமும்,
தயவும் உள்ளவர்
தூதர்கள் பாடிட , நட்சத்திரம் தாளமிட
விண்ணுலகின் மகிழ்ச்சியானீர்
எங்கள் பூவுலகின் மகிழ்ச்சியானீர்-2
ஏழை கோலமாய் இடமில்லை அவதரிக்க-2
மாட்டு தொழுவம் தெரிந்தெடுத்தாரே. -மனுகுல பாவம் போக்க
பிறந்தார், பிறந்தார்,பிறந்தார்,பிறந்தார்
பாலனாக இயேசு பிறந்தார்
கன்னிமரியின் மைந்தனாக கர்த்தர்
இயேசு பிறந்தார்
அவரே வழியும், சத்தியமும்,
ஜீவனுமானவர்
தன்னுயிர் ஈந்து மனு உயிர் காத்திடபிறந்தவர்.
மேய்ப்பர்கள் இராவிலே மந்தையை காத்திருக்க
நட்சத்திரம் வழி சொன்னதே
நம் ரட்சகர் பிறந்தாரென்று-2
பிதாவின் மடியில் செல்ல பிள்ளையே-2
யாவையும் துறந்து பாலனாய் பிறந்தார் – மனுகுல பாவம் போக்க
நமக்கொரு பாலகன் நமக்கொரு குமாரன்
நமக்கொரு ரட்சகர் பிறந்தார்
பெத்லகேமிலே மாட்டு தொழுவிலே
யூத ராஜசிங்கம் பிறந்தார்
அவர் அதிசய, ஆலோசனை, நித்திய,
சமாதான, வல்லமை
மனதுருக்கமும், இரக்கமும், சாந்தமும்,
தயவும் உள்ளவர்
உலகத்தின் பாவத்தை சுமந்து
தீர்த்திடும் தேவ ஆட்டுக்குட்டி
எங்கள் ஜீவ ( பஸ்கா) ஆட்டுக்குட்டி-2
பாவத்தின் சம்பளம் மரணம்என்றதாலே-2
தன்னையே பலியாக்க மன்னுலகில் பிறந்தார்.
மனுகுல பாவம் போக்க
மனு அவதாரம் எடுத்த மனுஷகுமாரனே
எங்கள் தேவகுமாரனே -2
எங்கள் தேவகுமாரனே.