mannil vantha nilave – Mannil vantha nilave

மண்ணில் வந்த நிலவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.

மண்ணில் வந்த நிலவே – Mannil vantha nilave
மண்ணில் வந்த நிலவே மகிமை சேர் மலரே
வருவாய் இறையரசே அருள் தருவாய் தினம் எமக்கே (2)
குழந்தை வடிவினில் இறைவன் வந்தார்
குமுத மலர்போல் இதழ் விரித்தார் (2)
ஞானியர் போற்றிய தேவமகன் – 2
மாடடை குடிலில் பிறந்துள்ளார்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
ஆண்டவர் இயேசுவை எதிர்பார்த்தார் (2)
வாடிடும் பயிருக்கு மாமழைபோல் – 2
மாமரிப் பாலகன் பிறந்துள்ளார்