Mannan Pirantaaar Nam Mannan Lyrics

மன்னன் பிறந்தார் நம் மன்னன்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

மன்னன் பிறந்தார் நம் மன்னன் பிறந்தார்
மானிடனாக இயேசு பிறந்தார்
இதை எங்கும் சாற்றிடுவோம்
இந்த நற்செய்தியை கூறிடுவோம்
1.பெத்லகேம் ஊரோரம் சத்திரம் நாடி
பக்தியுடன் பாட வாரீர்
சர்வத்தை படைத்த சர்வ வல்லவர்
முன்னணையில் காண வாரீர் – இதை
2.விண்ணிலிருந்து மண்ணில் வந்து
நானிலும் நன்மை செய்திட
சகல வியாதியையும் குணமாக்கிட
கிருபையும் அன்பையும் அளித்திட – இதை
3.அற்புதம் செய்ய மீட்பராய் பிறந்தார்
பாவ உலகை மீட்டிட
இருளான வாழ்வை ஒளியாக மாற்ற
இராஜாதி ராஜனாய் பிறந்தார் – இதை