manithanay iyesu pirantha nal

மனிதனாய் இயேசு பிறந்த நாள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.

மனிதனாய் இயேசு பிறந்த நாள்
உன்னதத்தில் வானவர் புகழ்ந்த நாள்
வாழ்வை தேடும் மாந்தர்கள் மகிழ்ந்த நாள்
படைப்புகள் புனிதம் பெற்ற நாள்
இது மண்ணையும் விண்ணையும் இணைத்த நாள்
இறையாட்சி மலர்ந்த நாள்
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் -3
Happy Christmas to you Merry Christmas to you
1. அமைதி வரம் கேட்கிறேன் பாலனே
போர்கள் நீங்கவும் பகைமை அழியவும் – மத
பேதங்கள் அகலவும்
இனி ஒற்றுமை நம்மில் மலரவும்
நல்அச்சம் நம்மில் வளரவும்
மனிதருள் மனிதன் உமை கண்டு
இறைச்சாயலாய் மாறவும் இறை சமூகமாய் வாழவும்
2. நிறைவான மனம் கேட்கிறேன் பாலனே
உன் வழி அறிந்து உம் பாதை நடக்க
துன்புறும் மனிதரின் அருகமர
வீதி எங்கும் அன்புப் பணி ஆற்றவும்
மகிழ்வாரோடு மகிழவும்
அழுபவர்களுக்கு ஆறுதல் வழங்கவும்
எல்லோருக்கும் எல்லாமுமாய் என்ற
இறை வார்த்தையாய் வாழவும்