mamaraiyin mainthan makimaiyulla – Maamaraiyin Mainthan Magimaiyulla

மாமறையின் மைந்தன் மகிமையுள்ள
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

மாமறையின் மைந்தன் மகிமையுள்ள – Maamaraiyin Mainthan Magimaiyulla
மாமறையின் மைந்தன் மகிமையுள்ள தேவன்
மண்ணிலே பாலனாகப் பிறந்துவிட்டார்
வேதம் தந்த தீர்ப்பு மனுகுலத்தின் மீட்பு
மண்ணிலே பாலனாக மலர்ந்துவிட்டார்
விண்ணவரும் மகிழ மண்ணவரும் போற்ற
மகிமை இயேசு பாலனாக பிறந்துவிட்டார்
தேவ தூதர் போற்றிட ஆயர்களும் மகிழ்ந்திட
அற்புத பாலனாக பிறந்துவிட்டார்
உன்னதத்தில் மகிமை பூமியில் சமாதானம்
மனுஷர் மேல் பிரியம் உண்டாகப் பிறந்தார்
பாவ சாபம் போக்கிட பரிசுத்தமாக்கிட
தேவ மைந்தன் பாலனாக பிறந்துவிட்டார்
வேதத்தின் சாட்சியாய் பாவம் போக்கும் பாலனாய்
பரிசுத்த பாலன் இயேசு பிறந்துவிட்டார்
வாழ்வில் ஒளி வீசவே வாதை துன்பம் நீக்கவே
வல்லவராய் மண்ணில் இயேசு பிறந்துவிட்டார்