Maa Mahilvaam Innaalilae song lyrics

பாமாலை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs, Gnanapaadalgal and Paamalaigal collection.

1. மா மகிழ்வாம் இந்நாளில்
செல்வோம் முன்னணைக்கே;
மா மீட்பரை நாம் காண்போம்
விஸ்வாசத்தோடின்றே.
மா மீட்பரை நாம் காண்போம்
விஸ்வாசத்தோடின்றே.
2. வந்தீர் மா அன்பாய்ப் பூவில்
விண் லோகம் துறந்தீர்;
மைந்தா, எப்பாவம் தீங்கில்
விழாது ரட்சிப்பீர்.
மைந்தா, எப்பாவம் தீங்கில்
விழாது ரட்சிப்பீர்.
3. மெய் அன்பர் நண்பர் நீரே,
நீரே எம் வாஞ்சையும்;
மெய் அன்பை எங்கள் பாவம்
வாட்டாது காத்திடும்.
மெய் அன்பை எங்கள் பாவம்
வாட்டாது காத்திடும.
Maa Mahilvaam Innaalilae, மா மகிழ்வாம் இந்நாளில் பாடல் வரிகள்