kulir nilavinil uthiththa – Kulir Nilavinil Uthitha

குளிர் நிலவினில் உதித்த

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

குளிர் நிலவினில் உதித்த – Kulir Nilavinil Uthitha
Lyrics:
குளிர் நிலவினில் உதித்த பாலகனே-ஏழைக்
குடில் தான் உன் உறைவிடமோ-(2)
ஞானிகள் தேடியது மாட மாளிகை-(2) எந்தன்
ஞானமே நீர் வந்ததோ இந்த ஏழை மாளிகை(2) -குளிர்
1.மண்ணின் மைந்தனே கன்னி மரியாளின் மகவே
மார்கழி மன்னனே, மகிமை ரூபனே(2)
தாவீதின் செல்வமே எங்கள் தாகத்தின் தண்ணீரே
தரணி இறங்கியே எம்மை தேடி வந்தீரே(2) – குளிர்
Chorus:
பெத்தலையில் பிறந்தவரை
போற்றித்துதி மனமே- இன்னும்(2)
சருவத்தையும் படைத்தாண்ட
சருவ வல்லவர்-இங்கு
தாழ்மையுள்ள தாய்மடியில்
தலைசாய்க்கலானார்.(2)
விண்ணின் வேந்தனே மண்ணில் மகவாக வந்தீரே
னிதம் மலர்ந்ததே மானுடம் செழித்ததே
மடிந்த வாழ்வையே மீண்டும் மலர செய்தீரே
மறுமை வாழ்வுக்கு நீரே வழியும் தந்தீரே(2)-குளிர்
Chorus:
எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இதயத்தை உம்மிடம் படைக்கின்றோம்
ஏங்குகின்றோம் உம் ஆசீர்பெறவே –
ஆ-ஆ-ஆ அல் லே லூ யா(7)
ஆ-ஆ-ஆ ஆ– மேன்.