kontatu thuthi patu

கொண்டாடு துதி பாடு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

கொண்டாடு துதி பாடு
இயேசு பிறந்தார்
மகிழ்ச்சியோடு மன்னவனை துதித்து பாடிடு _2
பாடுவோம் கொண்டாடுவோம்
பாலகனை போற்றிப் பாடுவோம் _2
உலகிற்கு ஒரே ஒரு இரட்சகராய்
இரட்சிப்பை தந்திடவே பிறந்தாரே
ஏழ்மையானவர் மனத் தாழ்மையுடையவர்
நம்மையே என்றென்றும்
நினைக்க வந்தவர்
பாடுவோம் கொண்டாடுவோம்
பாலகனை போற்றி பாடுவோம்
அன்னை மரி மடியினிலே தவழ்ந்தாரே கண்ணின் மணி போல்
நம்மை காத்திடவே மேய்ப்பர் ஆனவர் நம்மை ஆள வந்தவர்
நம்மையே காக்க வந்த தெய்வமானவர்
பாடுவோம் கொண்டாடுவோம்
பாலகனை போற்றி பாடுவோம்
ஒளி வீசும் சுடரொளியாய்
உதித்தாரே உலகிற்கு
பேரொளியை காண்பிக்கவே
அதிசயமான ஒளியுமானவர் _2
நம்மையே மீட்க வந்த மீட்பரானவர்
நம்மையே மீட்க வந்த மீட்பரானவர்
பாடுவோம் கொண்டாடுவோம்
பாலகனை போற்றிப் பாடுவோம்