iyesu rajan jeniththare

இயேசு ராஜன் ஜெனித்தாரே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

இயேசு ராஜன் ஜெனித்தாரே
பாவம் போக்க
இம்மானுவேல் பிறந்தாரே
சாபம் நீக்க
தேவ மைந்தன் மானிடனாய்
தாழ்மை தரித்தாரே
யாக்கோபில் உதித்த நட்சத்திரம்
ஞானியர் பணிந்த பொன் சித்திரம்
மந்தையின் மேய்ப்பர் மகிழ்வுடன் கண்ட
மகிமை துறந்த மன்னன் இவரே
இருளில் இருந்த நம்மை மீட்க
மண்ணிலே வந்திட்ட விண்ணின் வேந்தரே
கந்தை பொதிந்த கன்னியின் மகவே
தீர்க்கன் உரைத்த வார்த்தையின் நிறைவே
இயேசு ராஜன் ஜெனித்தாரே பாடல் வரிகள், Yesu Rajan Jenitharae Lyrics