iyesu palakan vanthuthiththar

இயேசு பாலகன் வந்துதித்தார்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

இயேசு பாலகன் வந்துதித்தார்
இந்த பாரினில் அவதரித்தார்
பாவியாம் என்னை இரட்சிக்கவே
மேசியா இயேசு பிறந்தாரே
வாருங்கள் வாருங்கள் இயேசுவை காண வாருங்கள்
பாடுங்கள் பாடுங்கள் இரட்சகர் உதித்தார் பாடுங்கள்
புல்லணையின் மீதிலே கந்தை கோலமாய்
மாட்டுத்தொழுவம் வந்தார் என் மீட்பர் இயேசுவே
நள்ளிரவில் நட்சத்திரம் ஒளிவீசவே
விடிவெள்ளியாய் தோன்றினாரே இருந்ள நீங்கவே
மேய்ப்பர்களும் ஞானியரும் செய்தி அறிந்தே
வாழ்த்துக்களை கூறிடவே ஓடி வந்தாரே
நாமும் இன்று மேசியாவைத் தேட வேண்டுமே
வாழ்வு தரும் இரட்சகர் நம் உள்ளம் வரவே