Itho Oru Narseithi

இதோ ஓரு நற்செய்தி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

இதோ ஓரு நற்செய்தி
என்ற சத்தம் தொனிக்குதே
ஆனந்த சந்தோஷம்
எங்கும் உண்டானதே
இயேசு பிறந்தார்
இரட்சகர் பிறந்தார்
இம்மானுவேலராய்
என்னோடே இருந்திடுவார்(2) -இதோ
1.உன்னதத்தின் மகிமை அவரே
பூமியில் சமாதானப் பிரபுவே
மனிதர் மேல் பிரியமாய்
இருந்திட நல் வழிகாட்டினார் – இயேசு
2.யாக்கோபின் நட்சத்திரம் அவரே
இரட்சிப்பின் வழியும் அவரே
வானிலும் பூவிலும்
இரட்சிப்பின் வழி அவரே
வானத்திலும் பூமியிலும்
வேறே வழியும் இல்லையே – இயேசு
3.யூதாவின் செங்கோல் அவரே
உலகை ஆளும் ராஜா அவரே
உன்னதர் நம்மை ஆண்டிட
முழுமையாய் அர்ப்பணம் செய்திடுவோம் – இயேசு