irul akarrita oli uthiththita

இருள் அகற்றிட ஒளி உதித்திட
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

இருள் அகற்றிட ஒளி உதித்திட
பிறந்தார் பாலகனாய்
மேய்ப்பர் வியந்திட தூதர் பாடிட
பிறந்தார் இரட்சகனாய்
அனுபல்லவி
அதிசயமானவரே அவர்
வல்லமையுள்ளவரே பாலன்
நித்தியமானவரே இயேசு
வார்த்தையாய் வந்தவரே
சரணங்கள்
1. அற்பமான மனிதனாக வயல்வெளியில் நின்ற என்னை
அச்சம் நீக்கி அழைத்து வந்தீரே
மறக்கப்பட்ட என் வாழ்வில் மறுவாழ்வு எனக்கு தந்து
மதிப்போடு வாழ செய்தீரே
2. வழிமாறின ஞானியாக மாளிகையில் நின்ற என்னை
வழிகாட்டி வணங்க செய்தீரே
நெறி தவறிய என் வாழ்வில் நற்செய்தி எனக்கு தந்து
நல்வாழ்வு வாழ செய்தீரே