immanuvelare samathana pirapuve

இம்மானுவேலரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

இம்மானுவேலரே சமாதான பிரபுவே
நித்திய கன்மலையும் நீரே
ஆலோசனை கர்த்தரே
கர்த்தத்துவம் தோளிலே
இருள் நீக்கும் வெளிச்சமும் நீரே
இது கிருபையின் காலம்
இது மகிமையின் காலம்
மகிழ்ச்சி பொங்கும் இதயங்களில்
சமாதானம் தங்கும் இதயங்களில்
1.வார்த்தையான நீர் மனிதனாக வந்திட்டீரே
பாவியான என்னை மீட்டிட வந்திட்டீரே-2
அடிமையின் ரூபமாய்
தேவ குமாரனாய்-2
நம்பிக்கையூட்டிட வந்தீரய்யா
நித்திய வழி காட்டி சென்றீரய்யா-2
2.நன்மை பிறக்குமோ
என்று சொன்ன ஊரினிலே
நன்மை செய்திட பிறந்தீரே பாரினிலே-2
ஏழைகளை ஒதுக்கிடாமல்
பாவிகளை விலக்கிடாமல் 2
பேதங்கள் தகர்த்திட வந்தீரய்யா
அன்பின் வழிக்காட்டி சென்றீரய்யா