Happy, Happy Christmas

உன்னத கீதம் பாட

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

Happy, Happy Christmas
Merry, Merry Christmas
Happy, Happy, Happy, Happy Christmas
உன்னத கீதம் பாட
ஆலய மணிகள் முழங்க
தேவபாலன் இயேசு மண்ணில் நமக்காய் பிறந்தார்
மகிழ்வோம்…புகழ்வோம்…
இணைந்து கூடி நடனமாடி ஆர்ப்பரிப்போமே!
Happy, Happy Christmas
Merry, Merry Christmas
Happy, Happy, Happy, Happy Christmas
விண்ணில் வெள்ளி தோன்றவே
விமலனாய் உதித்தாரே
மண்ணில் அமைதி ஓங்கவே
மரியிடம் பிறந்தாரே
மன்னர் மூவர் காண
மந்தை ஆயர் கூட
கந்தை கோலமாக கடவுள் வந்தார்
மகிழ்வோம்…புகழ்வோம்…
இணைந்து கூடி நடனமாடி ஆர்ப்பரிப்போமே!
வாடிடும் மனித உள்ளங்கள்
மகிழ்ந்திட வந்தாரே
இதயத்தின் இன்னல்கள் தீரவே
இறைமையாய் வந்தாரே
அன்பின் வேந்தனாய்
தேவ தூதனாய்
ஏழ்மை வடிவமாய் நமக்காய் பிறந்தார்
மகிழ்வோம்…புகழ்வோம்…
இணைந்து கூடி நடனமாடி ஆர்ப்பரிப்போமே!