Ennai Kaakkum Kedagamae

என்னைக் காக்கும் கேடகமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Jebathotta Jeyageethangal collection.

என்னைக் காக்கும் கேடகமே
தலை நிமிரச் செய்பவர் – (2)
இன்று உமக்கு ஆராதனை
என்றும் உமக்கே ஆராதனை (2)
1.உம்மை நோக்கி நான் கூப்பிடடேன்
எனக்கு பதில் நீர் தந்தீரையா (2)
படுத்து உறங்கி விழித்தெழுவேன்
நீரே என்னைத் தாங்குகிறீர்
ஆராதனை….. ஆராதனை….
அப்பா அப்பா உங்களுக்கு தான் – (2)
2.சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு
அஞ்ச மாட்டேன் அஞ்சவே மாட்டேன் (2)
விடுதலை தரும் தெய்வம் நீரே
வெற்றிப் பாதையில் நடத்துகிறீர் (2)
ஆராதனை… ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான் (2)
3. பக்தி உள்ள அடியார்களை
உமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர் (2)
வேண்டும் போது செவி சாய்க்கின்றீர்
என்பதை நான் அறிந்து கொண்டேன் (2)
ஆராதனை ….. ஆராதனை ….
அப்பா அப்பா உங்களுக்கு தான் – (2)
4.உலகப் பொருள் தரும் மகிழ்வைவிட
மேலான மகிழ்ச்சி எனக்குத் தந்தீர் – (2)
நீர் ஒருவரே பாதுகாத்து
சுகமாய் வாழச் செய்கின்றீர் – (2)
ஆராதனை…. ஆராதனை…..
அப்பா அப்பா உங்களுக்கு தான் – (2)
5. உமது அன்பில் மகிழ்ந்திருப்பேன்
உம்மோடுதான் நான் வாழ்ந்திடுவேன் – (2)
எனக்கு நன்மை செய்தபடியால்
நன்றிப் பாடல் பாடிடுவேன் – (2)
ஆராதனை…. ஆராதனை…..
அப்பா அப்பா உங்களுக்கு தான் – (2)