Enn_Yesuve

இயேசு என் வீட்டுக்கு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs, Easter Songs, Good Friday Songs, Mother Mary Songs, Roman Catholic Songs and Salvation Army Songs collection.

இன்று முதல் உன்னை நான் ஆசிர்வதித்திடுவேன்
என் சிறகுகளின் நிழலின் கிழ் உன்னை காத்திடுவேன்
உன்னை விட்டு விலகிடாமல் உன்னோடு என்றும் இருப்பேன்
உன்னை கைவிடாமல் உனக்குத் துணை இருப்பேன்
நான் உனது அடைக்கலமும் ஆற்றலுமாய் இருந்திடுவேன்
உனக்கு முன்னே நான் சென்று தடைகளெல்லாம் தகர்த்திடுவேன்
பாவங்களை போக்கிடுவேன்
நோய்களை குணமாக்குவேன்
உனது துக்கங்களை சந்தோஷமாய் மாற்றுவேன்
பழையவை மறைந்திடும் புது வழ்வு உன்னைச்சேரும்
என் அன்பினால் உன்னை காப்பேன்
கலங்காதே திகையாதே
போகும்போதும் வரும்போதும் உன்னை நான் காத்திடுவேன்
நீடிய ஆயுளை உனக்கு தந்து நலன்களினால் நிறைவளிப்பேன்
உனக்காக அனைத்தையுமே செய்து நான் முடித்திடுவேன்
கண்ணின் கருவிழி போல் கருத்தாய் உனைக் காப்பேன
அன்போடு அரவணைத்து ஆறுதல் நான் தருவேன்
காலமெல்லாம் என் கருணை
உனைத் தொடரும் என் மகனே