en iyesu iratsakare

என் இயேசு இரட்சகரே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

என் இயேசு இரட்சகரே
எனை மீட்க பிறந்தவர்
ஆரிராராரோ-2
மரியன்னை மடியினிலே
மகனாக தவழ்தவரே
ஆரிராராரோ-2
பாவம் சாபம் போக்கிட வந்த
மன்னவன் நீர் தானோ
விண்ணை விட்டு மண்ணில் வந்த
ராஜனும் நீர் தானோ
ஏழை கோலம் எடுத்தவரே
எங்களை தேடி வந்தவரே
உந்தன் அன்பை என்றும் நினைத்தே
உள்ளம் மகிழ்ந்து பாடிடுவேன்
லல்லா லாலா
கர்த்தாதி கர்த்தா தேவாதி தேவா
மகிமையானவரே
வானமும் பூமியும் வாழ்த்திட வந்த
அதிசயமானவரே
தூதர் கூட்டம் பாடிட
மேய்ப்பர் உம்மை வனங்கிட
ஞானியர் உம்மை பணிந்து போற்றும்
தேவ பாலன் நீரல்லவோ
லல்லா லாலா