Devanaruliya sollimudiyatha Lyrics

தேவன் அருளிய சொல்லி முடியா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and New Year Songs collection.

தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்கு ஸ்தோத்திரம்
தேவகுமாரன் இயேசுகிறிஸ்து பிறந்தார் ஸ்தோத்திரம்
தேவனே ஸ்தோத்திரம்
இயேசுவே ஸ்தோத்திரம்
ஆவியே ஸ்தோத்திரம்
ஹேப்பி கிறிஸ்மஸ் ஸ்தோத்திரம்
முன்னுரைப்படியே பிறந்தனரே
முன்னணையில் தவழ்ந்தனரே
சரித்திர நாயகனுக்கோ
சத்திரத்தில் இடமில்லையே
நமக்கொரு பாலகன் பிறந்தாரே
நமக்கு குமாரன் கொடுக்கப்பட்டார்
நாமம் அதிசயமே ஆலோசனை கர்த்தரே
3.உன்னதபெலன் நிழலாலே
உருவானார் உன்னதரே
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே
4.இயேசு என்ற பெயர் சொன்னால்
பாவங்கள் நீக்கிடுமே
இம்மானுவேல் இவரே
இருப்பார் நம்முடனே
5.ஞானம் வளர்த்தி தயையிலும்
தேவ கிருபையிலும்
அதிகம் அதிகமாய்
விருத்தியே அடைந்தாரே
கிருபை சத்தியம் நிறைந்தவராய்
நமக்குள்ளே வாசஞ்செய்வார்
ஆதியில் இருந்த வார்த்தை
ஆண்டவர் பிறந்தாரே
7.இயேசு நம்மில் பிறந்தாரே
இன்றே கொண்டாடுவோம்
நீதி பரிசுத்தத்தை
துதி மகிமையை கொண்டாடுவோம்