முன்பனி குளிர்காலம் – Munpani Kulir Kaalam

முன்பனி குளிர்காலம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

Chorus
முன்பனி குளிர்காலம்
முன்னனையினிலே
மன்னவர் நம் இயேசு
மனுவில் வந்தாரே
Pre-Chorus
அதிசயம் ஆ அதிசயம்
ஆனந்தம் பேரானந்தம் – 2
அதிசயம் ஆ அதிசயம்
ஆனந்தம் பேரானந்தம் – 2
Stanza 1
மாளிகை இருந்தும்,
மணி மாடங்கள் இருந்தும்
ராஜ்யம் ஆளும் குடும்பங்கள் ஆயிரம் இருந்தும்
மாளிகை இருந்தும்
மணி மாடங்கள் இருந்தும்
ராஜ்யம் ஆளும் குடும்பங்கள் ஆயிரம் இருந்தும்
ஆடம்பரமில்லா கன்னியின் வயிற்றில்
ஆவியில் கருவாகியே கருணாகரன் பிறந்தார்
ஆடம்பரமில்லா கன்னியின் வயிற்றில்
ஆவியில் கருவாகியே கருணாகரன் பிறந்தார்
Stanza 2
ஸ்ரிஷ்டிகர் நமக்கு, எத்தனை வசதி
நாம் பிறக்கையிலே நமக்கென நாயகன் கொடுத்தார்
ஸ்ரிஷ்டிகர் நமக்கு, எத்தனை வசதி
நாம் பிறக்கையிலே நமக்கென நாயகன் கொடுத்தார்
தாம் பிறக்கையிலோ, தமக்கென எதுவும்
வசதிகளற்ற மாட்டுக்குடிலில் ஸ்ரிஷ்டிகர் பிறந்தார்
தாம் பிறக்கையிலோ, தமக்கென எதுவும்
வசதிகளற்ற மாட்டுக்குடிலில் ஸ்ரிஷ்டிகர் பிறந்தார்
Stanza 3
எத்தனை பெரிய, ஆண்டவர் அவரே
இத்தனை எளிதாய், மகிமைகள் அத்தனை துறந்து.
எத்தனை பெரிய, ஆண்டவர் அவரே
இத்தனை எளிதாய், மகிமைகள் அத்தனை துறந்து.
கந்தையில் கவினாய், கடுங்குளிர் வெளியில்.
வார்த்தை என்பவர், இயேசு என்கிற, நாமத்தில் பிறந்தார்.
கந்தையில் கவினாய், கடுங்குளிர் வெளியில்.
வார்த்தை என்பவர், இயேசு என்கிற, நாமத்தில் பிறந்தார்.