இயேசு பாலன் தேவகுமாரன் – Yesu Palan Devakumaran

இயேசு பாலன் தேவகுமாரன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

பல்லவி
இயேசு பாலன் தேவகுமாரன்
மானிடனாய்ப் பிறந்தார்
காண்போம் வாருங்கள்
அனுபல்லவி
தன்னைத்தானே தந்தார்
விண்ணைத் தாண்டி வந்தார்
மரியின் மடியில் தவழ்ந்தார்
தேவன் மனுவானார்
1.முன்னணை மீதிலே மன்னவர் தோன்றினார்
நம்மை மீட்டிட நரனாய் மாறினார்
ஞானியர் தேடிடும் கோமகன் இவரே
வேதியர் வாழ்த்திடும் மேசியா இவரே
ஜோதியாய் தோன்றினார் தேவ பாலகனே
2.தூதர் பாடிடும் விண்ணிசை கேட்குதே
ஆயர் பாடிடும் வாழ்த்தொலி கேட்குதே
வாய்மையும் ஜீவனும் பாதையும் இவரே
வாழ்வினை நல்கிடும் தேவனும் இவரே
பாவியை மீட்டிடும் மீட்பரும் இவரே