அதம் செய்த பாதகம் – Agam Seitha Paathagam

அதம் செய்த பாதகம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

பல்லவி
அதம் செய்த பாதகம் தொலைய மன்றாடி,
அனுக்கிரகமாகவே திருக்குமாரனும் நீடி,-அதி
அனுபல்லவி
விதப் பரம போதன்,-உயர்
மேன்மைக் கிறிஸ்து நாதன்,
வெகு கோடிப் புகழ் பாடி, தூதர் கூடி,
கொண்டாட நாடி வந்தானே -அதம்
சரணங்கள்
1.மன்னன் தவீது குல கன்னி மரியினிடமாக
மனுடர்களில் அதிக பிரியம் உற, வினைகள் போக,
திருவானே தருகுவானே;-சுய
திரு உருவானே,
மலையானே, கலையானே,-மலைச்
சார்பில் பெத்தலேம் ஊரினில் பிறந்தானே
2. அகத் துதித் தொளிர் திருத்துவத்தி லொன்றானே,
அனைத்துலகமும் ‘வகுத்துக் காத்து நின்றானே,
மா மகத்துவ இம்மானுவேலே,-மனப்
பிரிய மிகுதியாலே
மனுவாக, வினை போக,-பசு
மாட்டுக் கொட்டிலில் காட்டினில் பிறந்தானே