azhakana varththaikal ummai patave

அழகான வார்த்தைகள்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

அழகான வார்த்தைகள் உம்மை பாடவே
இதமான செய்தியை சொல்லத் தேவையே
அழகான குழந்தை இயேசு பாலனே
இதமான செய்தியாய் வந்தார் பாருமே
வாழ்க! வாழ்க! இம்மானுவேலே – 2
1.எங்களோடுருக்க உலகில் வந்தீர்
எங்களுக்காக உம்மையே தந்தீர்
வானதூதர் பாட, பாட பிறந்தீர்
சமாதானம் நிலைக்க உதித்தீர்
2. மண்ணுயிர் மீட்க பூவியில் வந்தீர்
மண்ணுயிர் காக்க உம்மையே தந்தீர்
மந்தை மேய்ப்பர் நாட, நாட பிறந்தீர்
சந்தோஷம் வலுக்க உதித்தீர்
3. நன்மைகள் செய்ய தனியாய் வந்தீர்
நன்மையின் வித்தாய் பாரிலே தந்தீர்
ஞானி மூவர் தேடத், தேட பிறந்தீர்
மா செழிப்பு சிறக்க உதித்தீர்