மகிமையின் தேவன் மனு உரு – Magimaiyin Devan Manu Uru

மகிமையின் தேவன் மனு உரு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

பல்லவி
மகிமையின் தேவன் மனு உரு எடுத்தார்
மகிபனை கொண்டாடுங்கள் – இந்த
மனுகுலம் காக்க
தம்முடன் சேர்க்க
இரங்கினார் துதிபாடுங்கள்.
அணு பல்லவி
இதய தாகத்தின் இன்ப கீதங்கள்
சலங்கை ஓசையின் சங்கீதங்கள்
ஜாதிகள் யாவும் துதிகளாகவே
அதிபர் இயேசு மகிமை கூறவே – மகிமை
சரணங்கள்
1.மங்கலங்கள் தங்கி வாழவே
மண்ணின் மாயை ஓடிப்போகவே
விண்ணை துறந்த தேவமைந்தனார்
என்னை மீட்க பாலனாகினார்.
விண்ணில் தூதரே
மண்ணில் ஆயரே
கூடி பாடினார் நேய மாகவே
எண்ணிலாத புதுமைகள் எல்லாம்
மண்ணில் வந்து சேர்ந்ததம்மா
விண்ணையந்த நீதியின் சூரீயன்
மண்ணில் வந்து தவழ்ந்ததம்மா
தேவகோபம் இன்று மாறவே
சாபம்யாவும் ஓடிப்போகவே
புதுமைகளும் பிறந்ததுவே
பழமைகளும் ஒழிந்திடவே – மகிமை
2.கிருபை பெற்ற மரியின் வாழ்விலே
பெருமை சேர்த்து மேன்மைப்படுத்தினார்
அலகை ஜெயித்து அகிலம் மீட்கவே
அடிமை உருவில் கருவு மாகினார்
நம்மை மீட்கவே
தம்மை தாழ்த்தியே
விந்தை பாலனாய்
கந்தை சூடியே
நிந்தை யாவும் போக்கிட வந்த
நிமிலன் தேவ மைந்தனம்மா
வாதை நீங்கி
பாவங்கள் போக்கிட
வந்த வல்ல ஈசனம்மா
தூய ஆவி தந்த ரூபமே
கன்னி மடியில் வந்த தீபமே
நிந்தைகளும் அழிந்ததுவே சிந்தைகளும்
தெளிந்ததுவே – மகிமை