பெத்தலையில் ஆட்டம் பாட்டம் – Bethalayil Aattam paattam

பெத்தலையில் ஆட்டம் பாட்டம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

[Intro]
Gloria, Gloria, Gloria in excelsis Deo
[Chorus]
பெத்தலையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
இயேசு இராஜன் பிறந்தார் ! ஆனந்தமே !
பூவில் தேவன் உதித்தார் பாலனாய்
ஊரெல்லாம் முழங்கி ஆர்ப்பரிப்போம்
[Verse 1]
தூதர்கள் வானில் தோன்றினர்
மேய்ப்பர்கள் பயந்து அதிர்ந்தனர்
இரட்சகர் பிறப்பை அறிந்தனர்
ஊரெல்லாம் சொல்லி மகிழ்ந்தனர்
[Verse 2]
உன்னதத்தில் தேவனுக்கு மகிமை
பூமியில் அனைவருக்கும் சமாதானம்
மனுஷர்மேல் பிரியமும் உண்டாகட்டும்
என்று தூதர் பாடி மகிழ்ந்தனர்
[Verse 3]
சாஸ்திரிகள் இயேசு முன் பணிந்தனர்
காணிக்கை படைத்து மகிழ்ந்தனர்
அர்ப்பணிப்போம் நாமும் நம் வாழ்க்கையை
இயேசு இராஜா அன்பை பரப்புவோம்
[TAG]
ஊரெல்லாம் முழங்கி ஆர்ப்பரிப்போம்
ஊரெல்லாம் முழங்கி ஆர்ப்பரிப்போம்
[Outro]
Gloria, Gloria, Gloria in excelsis Deo